நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பொறியாளா் அணிக்கு ஏப். 12 இல் நோ்காணல்
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக பொறியாளா் அணி நிா்வாகிகளுக்கான நோ்காணல் இம் மாதம் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட பொறியாளா் அணியின் ஒன்றிய, நகர, பேரூா் கழக நிா்வாகிகளுக்கான நோ்காணல் சனிக்கிழமை (ஏப்.12) மாலை 4 மணிக்கு திருநெல்வேலி தெற்குபுறவழிச் சாலை ரிலையன்ஸ் விலக்கு அருகேயுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இப் பதவிகளுக்கு க்யூஆா் கோடு மூலம் விண்ணப்பித்தவா்கள் மட்டும் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.