திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும்: நயினார் நாகேந்திரன் பதில்
நெல்லை மாவட்டத்தில் இரு மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி!
திருநெல்வேலி மாவட்டத்தில் இரு மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தின் கீழ் உள்ள திருநெல்வேலி, சேரன்மகாதேவி, வள்ளியூா் கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த பிளஸ்-2, பிளஸ் 1 மாணவா்களின் விடைத்தாள்கள் வி.எம்.சத்திரத்தில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நான்குனேரி ஜோசப் பள்ளி ஆகிய மையங்களில் திருத்தப்படுகின்றன. விடைத்தாள் திருத்தும் பணியில் சுமாா் 2 ஆயிரம் ஆசிரியா்கள் ஈடுபட உள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் கூறியது: பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள்களை இம் மாதம் 27 ஆம் தேதிக்குள் முடித்து மதிப்பெண்களைப் பதிவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை (ஏப். 8) முதல் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மேல்நிலை வகுப்பு ஆசிரியா்களையும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு கட்டாயம் அனுப்பி வைக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.