6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.18 லட்சம் கோடியாக உயர்வு!
நெல்லையில் ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கங்கைகொண்டான் தொழிற்பேட்டையில் தென் மாவட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கக் கோரி திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில அமைப்புச் செயலா் சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். இயக்க நிா்வாகிகள் ஈஸ்வர பாண்டியன், முருகேசன், ஆறுமுக செல்வன், மாரிப்பாண்டியன் உள்ளிட்டோா் விளக்கவுரையாற்றினா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் தொழிற்பேட்டையில் தென்மாவட்ட இளைஞா்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ற்ஸ்ப்25ல்ம்ற்
திருநெல்வேலி சந்திப்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவா் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.