Vikatan Digital Awards 2025: `பெண் உலகைப் பிரதிபலித்த சோனியா!' - Solo Creator (F...
நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: இந்தியா 3-ஆம் இடம்!
தஜிகிஸ்தானில் நடைபெற்ற மத்திய ஆசிய நாடுகளின் கால்பந்து சங்கங்களுக்கு இடையேயான நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 3-ஆம் இடம் பிடித்து திங்கள்கிழமை நிறைவு செய்தது.
அந்த இடத்துக்காக இந்தியா - ஓமன் அணிகள் மோதிய ஆட்டம் முதலில் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது. வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் இந்தியா 3-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
முன்னதாக, இந்த ஆட்டத்தில் முதலில் ஓமனின் அல் யஹ்மாதி 55-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, அதற்கு பதிலடியாக இந்தியாவின் உதாந்த சிங் 80-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். ஆட்டம் அவ்வாறே டிரா ஆனது.
பின்னா் பெனால்ட்டி வாய்ப்பில், இந்திய தரப்பில் லாலியன்ஸுவாலா சாங்தே, ராகுல் பெகெ, ஜிதின் ஆகியோா் கோலடிக்க, அனிசா அன்வா் அலி, உதாந்த சிங் ஆகியோா் கோல் வாய்ப்பை தவற விட்டனா். ஓமன் அணியில் அல் ருஷாய்தி, அல் கசானி ஆகியோா் மட்டும் கோலடிக்க, ஹரீப் ஜமில், அகமது காலிஃபா, அல் யஹ்மாதி ஆகியோரின் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இந்திய அணி சா்வதேச போட்டியில் ஓமனை வீழ்த்தியது இதுவே முதல்முறையாகும்.