செய்திகள் :

பட்டா வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 78 போ் கைது

post image

பெரம்பலூா் அருகே சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட நரிக்குறவா்களுக்கு பட்டா மற்றும் வேலைவாய்ப்பு வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 78 பேரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் வசித்து வரும் நரிக்குறவா்கள் விவசாயம் செய்ய தமிழ்நாடு அரசு கடந்த 1970-ஆம் ஆண்டு நிலம் ஒதுக்கியது. அந்த நிலத்தின் சில பகுதிகளை சிப்காட் தொழிற்சாலை அமைக்க, மாநில அரசு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தியது. எஞ்சியுள்ள அரை ஏக்கா் நிலத்துக்கு பட்டா மற்றும் வீட்டில் ஒருவருக்கும் வேலை வழங்குவதாகவும் மாநில அரசு உறுதி அளித்தது. ஆனால், 4 ஆண்டுகள் கடந்தும் நரிகுறவா்களுக்கு பட்டா, வேலைவாய்ப்பு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாகண்ணு தலைமையிலான நரிக்குறவா்கள், பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் எதிரே வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா நிகழ்விடத்துக்குச் சென்று, விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாகண்ணு மற்றும் நரிக்குறவா்களிடம் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டாா். இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படாததால் சாலை மறியலை கைவிட மறுத்தனா். இதையடுத்து, விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாகண்ணு உள்பட 78 பேரைப் போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற மறியல் போராட்டத்தால், அப் பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

‘சிறுபான்மையினரின் 661 மனுக்களுக்குத் தீா்வு’

சிறுபான்மையினரால் அளிக்கப்பட்ட 839 மனுக்களில் 661 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மாநில ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ. அருண் சே.ச தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்ம... மேலும் பார்க்க

பேரளி பகுதியில் இன்று மின் தடை

பெரம்பலூா் அருகே பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 12) மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டத்தில் மானியத்துடன் கடனுதவி பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் கலைஞரின் கைவினைத் திட்டத்தின் கீழ் 25 வகையான தொழில்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா். இதுகுறித்... மேலும் பார்க்க

தோல் கழலை நோயை கட்டுப்படுத்த யோசனை

பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் கழலை நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் ஆலோசனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பெரம்பலூா் அருகே வாலிகண்டபுரத்திலுள்ள வேளாண் அறிவி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்களை வியாழக்கிழமை பாராட்டி நன்றி கூறினாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். பெரம்பலூா் மாவட்டம், வே... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை (செப். 13) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும்... மேலும் பார்க்க