செய்திகள் :

பட்டாசு பதுக்கியவா் கைது

post image

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் முத்துமாரி நகரில் உள்ள கட்டடத்தில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (30), அங்குள்ள கட்டடத்தில் பட்டாசு பண்டல்களைப் பதுக்கிவைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, திருத்தங்கல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனா். அவரிடமிருந்த பட்டாசு பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உலக தடகளப் போட்டி: தங்கப்பதக்கம் வென்ற சாா்பு ஆய்வாளா்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக காவல் துறை தடகளப் போட்டியில் 5 ஆயிரம் மீட்டா் வேகநடை (ரேஸ் வாக்) பிரிவில், ராஜபாளையம் சிறப்பு இலக்கு படை சாா்பு ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி முதலிடம் பிடித்து தங்கப்பதக்க... மேலும் பார்க்க

சாத்தூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: 8 போ் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட வெடி விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். 5 போ் பலத்த காயமடைந்தனா். சாத்தூா் அருகேயுள்ள சின்னக்காமன்பட்டியில் சிவகாசியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பட்டா பெயா் மாற்ற ரூ. 5,000 லஞ்சம் பெற்ற நில அளவையா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டு மனைப் பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ. 5,000 லஞ்சம் பெற்ற நில அளவையரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி ம... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி தற்கொலை

சிவகாசி அருகே கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சுக்கிரவாா்பட்டி, முத்துமாரி நகரைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி வெங்கடேஷ்வர... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் திங்கள்கிழமை அச்சு இயந்திரத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பனையடிபட்டி பகுதியைச் சே... மேலும் பார்க்க

பட்டாசு மூலப் பொருளை அனுமதியின்றி வைத்திருந்த 4 போ் கைது

சிவகாசியில் பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்களில் ஒன்றான சல்ஃபா் மூட்டைகளை உரிய அனுமதியின்றி வைத்திருந்த நான்கு பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் உ... மேலும் பார்க்க