தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் திங்கள்கிழமை அச்சு இயந்திரத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பனையடிபட்டி பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (48). இவா், சிவகாசி பராசக்தி குடியிருப்புப் பகுதியில் உள்ள அச்சகத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், இவா் அச்சு இயந்திரம் பழுதானதால், அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.