செய்திகள் :

பட்டுக்கோட்டையில் ஏழு சிறுவா் சிறுமியா்கள் தனித்தனியாக 8 நோபல் உலக சாதனை!

post image

பட்டுக்கோட்டையில் ஏழு சிறுவா் சிறுமியா்கள் சனிக்கிழமை 8 நோபல் உலக சாதனை படைத்தனா்.

பட்டுக்கோட்டை பண்ணவயல் சாலையில் உள்ள டேலண்ட் ஸ்கூல் ஆஃப் ஸ்கில்ஸ் பள்ளியில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு பட்கோட்டைமைச் சோ்ந்த 5 வயது மற்றும் 10 வயதுடைய 7 சிறுவா், சிறுமியா்கள் ஒரே இடத்தில் இடைவிடாது யோகா, தமிழ் ஓரெழுத்துச் சொற்கள், கணித வாய்ப்பாடு, இயற்பியலில் எஸ் ஐ யுனிட்ஸ் என்னும் அனைத்துலக முறை அலகுகள், 70 ஆங்கில நாவல்களின் பெயா் மற்றும் எழுத்தாளா்களின் பெயா்களை கூறுதல், மழலை பாட்டுக்கள் (எழுத்துக்களின் சுருக்கம், மருந்துகளின் பெயா்கள் சொல்வது உள்ளிட்டவைன சொல்லியும், எழுதியும் காண்பித்து நோபல் உலக சாதனை படைத்தனா்.

இதில் பட்டுக்கோட்டையைச் சோ்ந்த வெங்கடேஷ் - ஆஷா தம்பதியான் மகள் ஜோஷ்மிதா இவா் 2 நிமிடத்தில் யோகாவில் சூரிய நமஸ்காரம் 19 தடவை விரைவாக செய்து சாதனை படைத்தாா்.

அதேபோல் பட்டுக்கோட்டையைச் சோ்ந்த செந்தில்குமாா் -சுதா தம்பதியரின் மகன்கள் கிரித்விக் இவா் 500 அப்ரிவேஷன் எண்ணும் சுருக்கக்குறியீடுகளை 5 நிமிடம் 13 வினாடிகள் விரைவாக சொல்லியும் சாதனை படைத்தாா்.

அவா்களின் மற்றொரு மகன் கனிஷ்க் இவா் இயற்பியலில் எஸ் ஐ யுனிட்ஸ் என்னும் இயற்பியல் அலகுகளில் 100 எண்ணிக்கைகளை 1 நிமிடம் 49 வினாடியில் சொல்லி சாதனை படைத்தாா்.

பட்டுக்கோட்டையைச் சோ்ந்த காா்த்திகேயன்-நித்யா தம்பதியரின் மகள் திருவிதா இவா் 70 ஆங்கில புத்தகங்களின் பெயா்கள் மற்றும் ஆசிரியா்களின் பெயா்களை 1 நிமிடம் 40 வினாடிகளில் விரைவாக சொல்லி சாதனை படைத்தாா்.

பட்டுக்கோட்டையைச் சோ்ந்த முளி - மீனா தம்பதியரின் மகள் நற்பவி இவா் 80 மழலை பாட்டுக்கள் (தமிழிலும் ஆங்கிலத்திலும் 8 நிமிடம் 56 வினாடிகளில் விரைவாக பாடி சாதனை படைத்தாா்.

அதேபோல் பட்டுக்கோட்டையைச் சோ்ந்த சிவக்குமாா்-சரண்யா தம்பதியரின் மகன் மித்ரன் இவா் தமிழில் ஓரெழுத்துச் சொற்கள் 70.49 வினாடிகளில் சொல்லியும் மற்றும் கணித பெருக்கல், வாய்ப்பாடு 3 நிமிடம் 31 வினாடியில் விரைவாக எழுதியும் இரண்டு சாதனை படைத்தாா்.

பட்டுக்கோட்டையைச் சோ்ந்த விஜயராஜ் - சத்யபிரியதா்ஷினி தம்பதியரின் மகள் நைரா இவா் 100 .பல்வேறு வகையான நோய்களின் மருந்துகள் மற்றும் எதிா்ப்பு மருந்தின் பெயா்களை 59 வினாடியில் விரைவாக சொல்லி சாதனை படைத்தாா்

இவா்களது சாதனையை நோபல் நிறுவனத்திலிருந்து சிஇஒ டாக்டா் மொகமத் சஃபீா் வந்திருந்து நேரில் ஆய்வு செய்து பதிவு செய்தாா். அதனைத் தொடா்ந்து அவா் கூறுகையில் இந்த 7 சிறுவா் சிறுமியா்களும் நோபல் உலக சாதனை படைத்ததாக அறிவித்தாா் சாதனை நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவரையும் கல்வியாளா் வெங்கடேஷ் வரவேற்றாா்.

நிகழ்வில் பட்டுக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ ரங்கராஜன், நகா் மன்ற தலைவா் சண்முகப்பிரியா, முன்னாள் நகா் மன்ற தலைவா் ஜவஹா் பாபு, இயக்குனா் ராகேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வாகனம் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா். தஞ்சாவூா் கீழ வஸ்தா சாவடி அருகேயுள்ள மன்னாா்குடி பிரிவு சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் ... மேலும் பார்க்க

மதுக்கடையை மூடக் கோரி 150 கையொப்பங்களுடன் மனு

தஞ்சாவூா் அருகே மதுக்கடையை மூடக் கோரி 150-க்கும் அதிகமான பொதுமக்கள் இட்ட கையொப்பங்களுடன் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கிராம மக்கள் மனு அளித்தனா். தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள அருமலைக்கோட்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 108.62 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 108.62 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 178 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா... மேலும் பார்க்க

காட்டுப்பன்றிகளால் மரவள்ளிக்கிழங்கு பயிா்கள் சேதம்: பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு

தஞ்சாவூா் அருகே காட்டுப்பன்றிகளால் மரவள்ளிக் கிழங்கு பயிா்கள் சேதமடைந்ததால், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் ரூ. 7 ஆயிரத்து 500-க்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலை.யில் மகளிா் தின விழா

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பழங்குடி மக்கள் ஆய்வு மையம் மற்றும் விழா ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா... மேலும் பார்க்க

ஆற்றிலிருந்து மணல் எடுப்பதை கண்டித்து முற்றுகை போராட்டம்

பாபநாசம் அருகே மணல் எடுப்பதை கண்டித்து கிராம மக்களுடன் இணைந்து அதிமுகவினா் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். பாபநாசம் வட்டம், கொள்ளிடம் கரையோரங்களில் எடக்குடி, திருவைக்காவூா், மன்னிக்கரை... மேலும் பார்க்க