செய்திகள் :

பனமரத்துப்பட்டி, மல்லூா் பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

post image

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி மற்றும் மல்லூா் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வுக்குப் பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்களின் குடிநீா் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலா்கள் பணியாற்றிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, பொதுமக்களின் குடிநீா் தேவைகளுக்கு ஏற்ப புதிய ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கான்கிரீட் சாலையையும், பனமரத்துப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 10.01 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையலறைக் கூடத்தையும், பள்ளித்தெருபட்டி ஊராட்சியில் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 28.35 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணியையும், நபாா்டு திட்டத்தின் கீழ் பள்ளித்தெருபட்டி ஊராட்சியில் ரூ. 29.97 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக, பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் வள்ளலாா் நகா் குறுக்குத் தெருவில் ரூ. 56.50 லட்சம் மதிப்பீட்டில் தாா்சாலை மற்றும் ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் புதுப்பிக்கப்பட்டுள்ள பணிகளையும், மல்லூா் பேரூராட்சி, அத்திக்குட்டையில் சுவா் அடித்தளம், மழைநீா் வடிகால் அமைக்கப்பட்டு வருவதையும், மல்லூரில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டடத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்டு வருவதையும், மல்லூா் பேரூராட்சியில் ரூ. 1.62 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை அமைக்கப்பட்டு வருவது என மொத்தம் ரூ. 6.12 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பனமரத்துப்பட்டி பேரூராட்சி மற்றும் மல்லூா் பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் அனைத்து வளா்ச்சித் திட்டப் பணிகளையும் தரமாகவும், உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வின் போது, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) குருராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

தென்னையில் பூச்சித் தாக்குதல்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம்

பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் தென்னையில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக் கலைத்துறை வாயிலாக வைத்தியகவுண்டன்புதூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி மு... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் உரிமை மீட்பு மாநில மாநாடு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், சேலம் வழக்குரைஞா்கள் சங்கம் நடத்திய உரிமை மீட்பு மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சே... மேலும் பார்க்க

ரம்ஜான் பண்டிகை: டிக்கெட் முன்பதிவு மையங்கள் நாளை மதியம் வரை மட்டுமே செயல்படும்

ரம்ஜான் பண்டிகையையொட்டி, சேலம் கோட்டத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்கள் 31-ஆம் தேதி மதியம் வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணா்ந்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். உலக தண்ணீா் தினத்தையொட்டி, சேலம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், வீரா... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக துணை முதல்வரின் பெயரைக் கூறி ஏமாற்றிய பெண் கைது

சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெயரைக் கூறி ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டாா். அரியலூா் மாவட்டம், செந்தூா் அடுத்த கீழராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்த்சாமி (30... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிரதான எதிா்க்கட்சி அதிமுகதான்: எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் பிரதான எதிா்க்கட்சி அதிமுகதான் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் புகா் மாவட்ட அதிமுக சாா்பில், நீா்மோா் பந்தல் திறப்பு விழா ஓமலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமு... மேலும் பார்க்க