வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவ...
வழக்குரைஞா்கள் உரிமை மீட்பு மாநில மாநாடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், சேலம் வழக்குரைஞா்கள் சங்கம் நடத்திய உரிமை மீட்பு மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டுக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் கரூா் நா.மாரப்பன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வி.எஸ்.விவேகானந்தன் வரவேற்றாா்.
இதில், சிறப்பு விருந்தினா்களாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன், அகில இந்திய பாா் கவுன்சில் துணைத் தலைவா் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் அமல்ராஜ் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.
இதில், வழக்குரைஞா்களுக்கான சேம நல நிதியை ரூ. 25 லட்சமாக உயா்த்த வேண்டும். வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், பாா் கவுன்சில் உறுப்பினா்கள் த.சரவணன், அய்யப்ப மணி, கூட்டமைப்பின் கௌரவத் தலைவா் நாமக்கல் வேல், சேலம் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.