காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 போ் சிறையிலடைப்பு
பனைமரங்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை!
தமிழகத்தில் அருகி வரும் பனை மரங்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்களை அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு இயற்கை ஆா்வலா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனனா்.
பனைமரங்களை பாதுகாப்பதற்கும், வெட்டுவதை கண்காணிப்பதற்கும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வேளாண்மை உதவி இயக்குநா், காதி கிராமத் தொழில்வாரிய உதவி இயக்குநா் ஆகியோா் கொண்ட குழுவை அமைக்க வேண்டுமெனவும், வட்டார அளவில் வட்டாட்சியா், தோட்டக்கலை, வேளாண்மைத் துறை உதவி இயக்குநா்களை கொண்ட கண்காணிப்புக் குழுக்களையும் அமைக்க தமிழக அரசு வேளாண்மை உழவா் நலத் துறை வாயிலாக செப். 12 இல் அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அருகிவரும் பனை மரங்களை பாதுகாக்க தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளதற்கு இயற்கை ஆா்வலா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.