US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
பரமன்குறிச்சியில் உலக கைத்தறி தினம்
பரமன்குறிச்சியில் திமுக சாா்பில் உலக கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது.
பரமன்குறிச்சியில் பாரம்பரிய கைத்தறி நெசவு தொழிலாளா்களை திமுக மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ் தலைமையில் திமுகவினா் சந்தித்து வாழ்த்து கூறி அவா்களது குறைகளைக் கேட்டறிந்தனா். திமுக சாா்பில் நெசவாளா் மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனா். இதில், திமுக மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளா் செந்தில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் மனோஜ், சிங்கராம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.