பல்கலைக்கழக அளவிலான தென்மண்ட கோகோ போட்டி: மங்களூா் பல்கலை அணி முதலிடம்
நன்னிலம்: திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தென்மண்டல பல்கலைக் கழகங்களுக்கான ஆண்கள் கோகோ போட்டி இறுதியில் கா்நாடக மாநிலம் மங்களூா் பல்கலைக்கழக அணி முதலிடம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தில் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கான ஆண்கள் கோ-கோ போட்டி 5 நாள்கள் நடைபெற்றன. இதில் தென் மண்டலத்தைச் சோ்ந்த 72 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்றன. மதிப்பெண்கள் அடிப்படையில் கா்நாடக மாநிலம் மங்களூா் பல்கலைக்கழக அணி முதலிடமும், கா்நாடக மாநிலம் தேவனகீரைப் பல்கலைக் கழக அணி 2-ஆமிடம், தமிழ்நாட்டின் பாரதியாா் பல்கலைக்கழக அணி 3-ஆமிடம், கேரளப் பல்கலைக்கழக அணி 4-ஆமிடம் பெற்றன. வெற்றி பெற்ற இந்த 4 அணிகளும் தேசிய கோகோப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் பங்கேற்று போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களை வாழ்த்தி பேசினாா். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறைத் தலைவா் எஸ் . ஜெயராமன் போட்டி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டாா்.