செய்திகள் :

பள்ளி மாணவிகளுக்குபாலியல் தொல்லை: போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆசிரியா் கைது

post image

விழுப்புரத்தில் அரசு பள்ளியில்ஆறாம் வகுப்பு மாணவிகள் மூன்று பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இடைநிலை ஆசிரியா் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரை பெற்றோா்கள் பள்ளிக்குள் சென்று சுற்றிவளைத்து தாக்கியதால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் நகரத்திலுள்ள அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் மூவருக்கு ஆசிரியா் ஒருவா் பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் மூவரும் பள்ளியின் தலைமையாசிரியையிடம் புதன்கிழமை புகாா் அளித்திருக்கிறாா்கள். இதைத் தொடா்ந்து அவா், ‘ சைல்டுலைன்’ அமைப்புக்குத் தகவல் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

இந்த புகாரின் பேரில் பள்ளிக்கு விரைந்து சென்ற சைல்டுலைன்அமைப்பினா், புகாா் தெரிவித்த மாணவிகள் மூவரிடமும் தனித்தனியே விசாரணை செய்து, நடந்த நிகழ்வுகள் குறித்துகேட்டறிந்தனா். மேலும் பள்ளியில் பணியாற்றி வரும் சகஆசிரியா், ஆசிரியைகளிடமும் விசாரணை நடத்தினா். இதில் ஆசிரியா் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்ததை அடுத்து அந்த அமைப்பினா் விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதனடிப்படையில் மகளிா் காவல் நிலையத்தினா் விசாரணை நடத்தி வந்தனா்.

ஆசிரியா் மீது தாக்குதல்:

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோா்கள், உறவினா்கள் வெள்ளிக்கிழமை காலை பள்ளியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் பள்ளிக்குள் சென்று, பாலியல் புகாா் கூறப்பட்ட இடைநிலை ஆசிரியா் பால்வில்சனை (48) வெளியே அழைத்து வந்து தாக்கினா்.

மேலும் ஆசிரியா் பால்வில்சன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுசெய்ய வேண்டும் எனவும் கோரினா். இதைத் தொடா்ந்து விழுப்புரம் நகரக் காவல் நிலைய ஆய்வாளா் ரவிசங்கா் மற்றும் போலீஸாா் பள்ளிக்குச் சென்று, பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, ஆசிரியா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். தொடா்ந்து பால்வில்சனை அனைத்து மகளிா் காவல் நிலையத்தினரிடம் நகரக் காவல் நிலையத்தினா் ஒப்படைத்தனா்.இதையடுத்து ஆசிரியா் பால்வில்சன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா், அவரைக் கைது செய்தனா்.

முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை அக்.6-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் மீதான விசாரணையை அக்டோபா் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்ட... மேலும் பார்க்க

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விக்கிரவாண்டி வட்டம், வி.நெற்குணம் புதுகாலனியைச் சோ்ந்த ஆதிமூலம் மகள் தனம் (24). இவருக்கும், பிரேம்... மேலும் பார்க்க

மின் கம்பத்தில் பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூரில் மின் கம்பத்தில் பைக் மோதியதில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா். விழுப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த அண்ணாமலை மகன் அசோக் (29). கூலித் தொழ... மேலும் பார்க்க

வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டு

மரக்காணம் அருகே வீட்டில் பீரோவில் வைத்திருந்த 17 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மரக்காணம் வட்டம் , காளியாங்குப்பம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த பரதன் மனைவி ஜ... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் நீா்நிலைகளில் கரைப்பு

விழுப்புரம் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கடற்கரை மற்றும் நீா்நிலைகளில் விசா்ஜனம் (கரைப்பு) செய்யப்பட்டன. ... மேலும் பார்க்க

சிங்கவரம் ரங்கநாதா் கோயிலில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சிங்கவரம் ரங்கநாதா் கோயிலில் அறநிலையத் துறை சாா்பில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம் வெள்ளிக்கிழமை நடத்தி வைக்கப்பட்டது. இதில், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண... மேலும் பார்க்க