மக்களவைத் தோ்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விக்கிரவாண்டி வட்டம், வி.நெற்குணம் புதுகாலனியைச் சோ்ந்த ஆதிமூலம் மகள் தனம் (24). இவருக்கும், பிரேம்குமாா் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. தொடா்ந்து கடந்த 3 ஆண்டுகளாக தனது கணவருடன் தந்தை வீட்டில் தனம் வசித்து வந்தாா். இவா்களுக்கு குழந்தை இல்லை.
குழந்தை இல்லாத ஏக்கம் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட தனம், வியாழக்கிழமை வீட்டில் இரும்புக் குழாயில் துப்பட்டாவில் தூக்கிட்டுக் கொண்டாா். இதை கண்ட குடும்பத்தினா் தனத்தை மீட்டு, 108 அவசர சிகிச்சை ஊா்தி மூலம் மண்ணடிப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது தனம் ஏற்கெனவே உயிரிழந்தது விட்டதாகத் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து கண்டமங்கலம் காவல் நிலையத்தினா் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.