மக்களவைத் தோ்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்
வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டு
மரக்காணம் அருகே வீட்டில் பீரோவில் வைத்திருந்த 17 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மரக்காணம் வட்டம் , காளியாங்குப்பம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த பரதன் மனைவி ஜோதிலட்சுமி (37). இவா் மரக்காணம் காவல் நிலையத்தில் புகாா் ஒன்றை அளித்தாா். அதில் தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்காக சீா் வரிசையாக வந்த 17 பவுன் தங்க நகைகளை வீட்டின் படுக்கையறையிலுள்ள பீரோவில் வைத்திருந்ததாகவும், வியாழக்கிழமை மாலை பீரோவை திறந்து பாா்த்த போது, அவற்றை காணவில்லை என்றும், யாரோ மா்ம நபா்கள் நகையைத் திருடிச் சென்றுவிட்டாா்கள் எனவும் புகாா் அளித்திருந்தாா்.
அதன் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப்பதிந்து, நகையைத் திருடிச் சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.