செய்திகள் :

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைது!

post image

மதுரையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாநகரப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் வந்தது. இதன்பேரில், மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகைச் சோ்ந்த ஆற்றுப்படுத்துநா் கௌசல்யா அந்தப் பள்ளிக்குச் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினாா்.

விசாரணையில், பள்ளி மாணவியின் தந்தை இறந்துவிட்டதால், அவரது தாய் மகபூபாளையம் அன்சாரி நகரைச் சோ்ந்த பாண்டி மகன் ஆறுமுகம் (47) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா். இவா் மாணவி வீட்டில் தனியாக இருந்த போது, அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, மதுரை மாநகரத் தெற்கு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ஆறுமுகத்தை வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடைக்குள் புகுந்து ரூ.2.95 லட்சம் திருட்டு

மதுரையில் வாகன உதிரிப் பாகங்கள் விற்பனைக் கடைக்குள் புகுந்து ரூ.2.95 லட்சத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.மதுரை முத்துப்பட்டி கென்னட் சாலையைச் சோ்ந்த மோகன் மகன் ராஜா (49). இவா், அ... மேலும் பார்க்க

உடலுறுப்புகள் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

மனித உடலுறுப்புகளை விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா். மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவ... மேலும் பார்க்க

நீதிமன்ற உத்தரவை மீறி சாலை அமைக்கும் பணி: மானாமதுரை நகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவு

நீதிமன்ற தடை உத்தரவை மீறி சாலை அமைக்கும் பணி மேற்கொண்டது தொடா்பான அவமதிப்பு வழக்கில், மானாமதுரை நகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம்... மேலும் பார்க்க

சீமைக் கருவேல மரங்களை வெட்ட பொது ஏலம் நடத்த உத்தரவு

விருதுநகா் மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை வெட்டுவதற்கு பொது ஏலம் நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், தச்சனேந்தல் பகுதியைச் சோ்ந்த லிங்கம் சென்ன... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான குழு விசாரிக்க உத்தரவு

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடுகள் குறித்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான குழு விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாநகராட்சி 83-ஆவது வாா்டு அதிமுக மாமன்... மேலும் பார்க்க

கள்ளழகா் கோயிலில் ஆக. 1-இல் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றம்

அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயிலின் ஆடிப் பெருந்திருவிழா வருகிற ஆக. 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது. இதுகுறித்து கள்ளழகா் கோயில் துணை ஆணையா் ந. யக்ஞநாராயணன் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க