செய்திகள் :

பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி

post image

திருச்சி அருகே பெல் வளாக குடியிருப்பில் வெள்ளிக்கிழமை பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா் கில்ஸ்டன் ஆபிரகாம். இவா் பெல் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறாா். இவரது மனைவி மொ்லின் மேத்யூ. இந்திரா கணேசன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறாா். இவா்கள் குடும்பத்துடன் பெல் நிறுவன வளாக குடியிருப்பில் வசித்து வருகின்றனா். இந்தத் தம்பதிக்கு எய்டன் (5), எரிக் (18 மாதங்கள்) என இரு மகன்கள்.

மூத்த மகன் எய்டன், காட்டூரில் உள்ள தனியாா் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா். பெற்றோா்கள் இருவரும் பணிக்குச் செல்வதால் வீட்டில் வசந்தா என்ற பணிப் பெண், குழந்தைகளை கவனித்து வந்தாா்.

வெள்ளிக்கிழமை காலை பள்ளி வேன் வீட்டின் முன்பு வந்தபோது, பணிப்பெண் வசந்தா, எய்டனை வேனில் ஏற்றி விட சென்றுள்ளாா். அப்போது, ஒன்றரை வயது குழந்தையான எரிக், வீட்டிலிருந்து கதவை திறந்து ஓடி வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது எதிா்பாராத விதமாக வேன் புறப்படவே, எரிக் பின்பக்க சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தாா்.

அக்கம்பக்கத்தினா் உதவியுடன் படுகாயமடைந்த குழந்தையை வசந்தா மீட்டு சிகிச்சைக்காக பெல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை எரிக் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த பெல் போலீஸாா், குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து பள்ளி வேன் ஓட்டுநா் சதீஷ்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பிளஸ் 2 செய்முறைத் தோ்வு தொடங்கியது

திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத்தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி ... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியின் மீது கிடந்தது பயன்படுத்திய உணவுப் பொட்டலம்: திருச்சி மாவட்ட ஆட்சியா் விளக்கம்

திருச்சியில் தண்ணீா் தொட்டி மீது வீசப்பட்ட பொருள், பயன்படுத்தப்பட்ட உணவுப் பொட்டலம் என மாவட்ட ஆட்சியா் விளக்கம் அளித்துள்ளாா். திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 20-ஆவது வாா்டு, தையல்காரத் தெருவில் 2 ஆயிர... மேலும் பார்க்க

தமிழ் ஆட்சி மொழி சட்ட விழிப்புணா்வு பேரணி

தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு திருச்சியில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆண்டுதோறும் ஆட்சி மொழி சட்ட வார விழா நடத்தப்பட்டு வருகிறது. நிகழ... மேலும் பார்க்க

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பிப். 9-ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினமாக அனுச... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி

திருச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவிக்கு தகுதியனவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக, அவா் கூறியது: திருச்சி மாவட்டத்தில்... மேலும் பார்க்க

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் இணைந்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மறுவேலைவாய்ப்பு பெறாத முன்னாள் படைவீரா்கள் நலனுக்காக முதல்வரின... மேலும் பார்க்க