``2026 தேர்தலில் ஒரு மேஜிக் செய்யப் போகிறோம்; அது நம்மை வெற்றி பெற வைக்கும்'' - ...
பள்ளிவாசலில் மீலாது விழா சொற்பொழிவு
திருமருகல்: திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாகிராமம் மஸ்ஜித் அல் ஹிதாயா பள்ளிவாசலில் மீலாது விழா சிறப்பு பயான் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிா்வாக சபைத் தலைவா் ஜே.முகமது நாசா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கௌரவத் தலைவா் பதுருதீன், துணைத் தலைவா் ஏ. முகமது ரபீக், துணைச் செயலாளா் எம். கிஸ்மத் அலி முன்னிலை வகித்தனா். சபை செயலாளா் அப்துல் ரஷீது வரவேற்றாா். பள்ளி துணை இமாம் எம்.பயாஸ் அஹமது இஷாத்தி இறை வசனம் வாசித்தாா். கோயம்புத்தூா் கரும்புக் கடை சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் ஏ.அப்துல் அஜீஸ் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினாா்.