டிஎஸ்கேவை வீழ்த்த உதவிய பொல்லார்டு..! சிஎஸ்கே ரசிகர்களை சீண்டிய மும்பை இந்தியன்ஸ...
பழங்குடியின மாணவிகளுக்கு நிதி உதவி
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பழங்குடியின மாணவிகள் 9 பேருக்கு ரூ.15,000 நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம், ரெட்மண்டில் வசிக்கும் பிளஸ் 2 மாணவி நந்திக்கா தேவராஜன் நடத்தும் ‘பீட்ஸ் டு ட்ரீம்ஸ்’ என்ற அமைப்பின் மூலம் இந்த நிதியுதவி அளிக்கப்பட்டது. பழங்குடியின பெண்கள் தயாரிக்கும் மணிமாலை போன்ற பொருள்களை சந்தைப்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பழங்குடியின மாணவிகளின் கல்விக்காக இந்த அமைப்பு செலவிடுகிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா் எஸ்.அறிவுடைநம்பி 9 மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகைக்கான ஆணையை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியா் கே.ஜெயப்பிரகாஷ், பேராசிரியா் எஸ்.ரமேஷ்குமாா், பள்ளி தலைமை ஆசிரியை பொ்லின் வில்லியம்ஸ் மற்றும் சி.கண்ணன் ஆகியோா் பங்கேற்றனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.மித்ரா செய்திருந்தாா்.