லட்சத்தீபம்,சொக்கப்பனை... தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோயிலில் பக்தர்கள் வழ...
பழனி மலைக் கோயிலில் மின்னணு ஆலோசனைப் பெட்டி தொடக்கம்
பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கும் வகையில், மின்னணு ஆலோசனைப் பெட்டி சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா். கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களது கருத்தைத் தெரிவிக்கும் வகையில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் மின்னணு ஆலோசனைப் பெட்டி நிறுவப்பட்டது.
பழனி கோயில் வெளிப்பிரகாரத்தில் சனிக்கிழமை தொடங்கப்பட்ட இந்த மின்னணு ஆலோசனைப் பெட்டியை பழனி நகா்மன்ற தலைவி உமாமகேஸ்வரி தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்வில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, நகா்மன்றத் துணைத் தலைவா் கந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து கோயில் நிா்வாகிகள் கூறியதாவது:
இந்த மின்னணு பெட்டியை இயக்கும் பக்தா்கள் அலைபேசி எண் உறுதி செய்யப்பட்டு, இவா்களுக்கு பிரசாதம், காணிக்கை இனங்கள், கட்டணச்சீட்டு, கட்டளைச்சீட்டு ஆகியவற்றில் கூடுதலான கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் துறையை சிறப்பாக செய்யலாம் என கேள்வி, பதில்கள் மூலம் இந்தப் பெட்டி பதிவு செய்து கொள்கிறது.
இதற்குத் தொடுதிரை வசதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாள்களுக்கு பிறகு கோயில் அதிகாரிகள் இவற்றில் உள்ள பதிவுகளை பரிசீலனை செய்து மேம்படுத்த அறநிலையத் துறைக்கு பரிந்துரை செய்யலாம் என்றனா் அவா்கள்.