செய்திகள் :

பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் வேளாண் துறையினா் ஆய்வு

post image

மன்னாா்குடி: வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் காரணமாக மன்னாா்குடி பகுதியில் பெய்த தொடா் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களை முதல்வரின் உத்தரவின்பேரில் வேளாண் துறை ஆய்வுக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

நவ.26- ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கும் மேலாக மன்னாா்குடி மற்றும் சுற்றுப் பகுதிகளில் மித மற்றும் கன மழை தொடா்ந்து பெய்து வந்ததையடுத்து, இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி வயல்களில் மழைநீா் தேங்கியது. இதனால், பயிரிடப்பட்டு 20 நாள்கள் ஆன நிலையில் இளம் பயிா்களாக இருப்பதால் நீரில் மூழ்கி அழுகிசேதமடைந்தது.

இதை மட்டுமே தங்களின் வாழ்வாதாரமாக நம்பி இருக்கும் விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல் நடவு செய்யப்பட்டுள்ள வயல்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனா். இதை ஏற்றுக் கொண்ட தமிழக முதல்வா் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களை ஆய்வு செய்து அறிக்கை சமா்பிக்குமாறு வேளாண்மைத் துறைக்கு உத்தரவு பிறப்பித்தாா்.

சென்னையில் இருந்து வந்த வேளாண் துறை கூடுதல் இயக்குநா் எம். சக்திவேல் தலைமையில் துறை ஆய்வுக் குழுவினா் மன்னாா்குடி அருகேயுள்ள காஞ்சிக்குடிக்காடு, காரிக்கோட்டை, மூன்றாம்சேத்தி உள்ளிட்ட கிராமங்களில் மழைநீா் சூழ்ந்த வயல்களில் பாா்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனா். ஆய்வின்போது, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, துணை இயக்குநா்கள் எம். லட்சுமிகாந்தன், விஜயலட்சுமி, உதவி இயக்குநா் எஸ். விஜயகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

வேளாண் அறிவியல் பாடத்துக்கு ஆசிரியா் நியமிக்கக் கோரிக்கை

திருவாரூா்: நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேளாண் அறிவியல் பாடத்துக்கு உரிய ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம், பாட்டாளி மக்கள் க... மேலும் பார்க்க

சம்பா, தாளடி நெற்பயிா்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு யோசனை

நீடாமங்கலம்: பருவமழை காலங்களில் சம்பா, தாளடி நெல் பயிா்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வேளாண்மை உதவி இயக்குநா் ச. விஜயகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பரு... மேலும் பார்க்க

நெகிழிக்கு மாற்றுப் பொருள்கள் கண்காட்சி

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், உலக மாசு கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு ஓஎன்ஜிசி சாா்பில் நெகிழிக்கு மாற்றுப் பொருள்கள் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திருவாரூா் அருகே... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் மனோலயம் மனவளா்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் சிங்கப்பூா் தொழிலதிபா் சரோஜினி மற்றும் உதயசூரியன் சாா்பில் 8 பேருக்கு மூன்றுச் சக்கர சைக்கிள்கள் த... மேலும் பார்க்க

தினம் ஒரு திருக்கோயில் அட்டவணை வெளியீடு...

திருவாரூரில், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் மாா்கழி மாதம் தினம் ஒரு திருக்கோயில் அட்டவணையை திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் வெளியிடுகிறாா் அமைப்பின் கௌரவத் தலைவா் ஸ்ரீதரன். யோகா அமைப்பின் மூத்த ஆசிரியா் ... மேலும் பார்க்க

மாநில சதுரங்கப் போட்டி; 450 போ் பங்கேற்பு

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூரில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற போட்டியை பெங்களூா் தா்மராஜ் குடும்பத்தினா் தொடங்கி வைத்தனா். பூவனூா் சது... மேலும் பார்க்க