பதவி விஷயத்தில் அரசியல்வாதிகள் திருப்தி அடைவதே இல்லை: மத்திய அமைச்சா் கட்கரி
மாநில சதுரங்கப் போட்டி; 450 போ் பங்கேற்பு
நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூரில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற போட்டியை பெங்களூா் தா்மராஜ் குடும்பத்தினா் தொடங்கி வைத்தனா். பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயில் நிா்வாக அதிகாரி எஸ். மாதவன், அறநிலைய ஆய்வாளா் வினோத் கமல், ஊராட்சித் தலைவா் கே. மோகன், ஒன்றியக் குழு உறுப்பினா் கே. பாரதிமோகன், திருவாரூா் மாவட்ட சதுரங்க கழகத் தலைவா் செந்தில்குமாா், மாவட்டச் செயலாளா் சரவணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
இதில், திருவாரூா், தஞ்சாவூா், நாகை, திருச்சி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை, சேலம், கடலூா் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 450-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தினா்.
இப்போட்டி, 7, 9,11,13 மற்றும் 25 வயதுக்குட்பட்டோா் ஆகிய பிரிவுகளில் நடைபெற்றன. முதன்மை நடுவா் சிலம்பரசன் தலைமையில் 20 போ்கள் நடுவா்களாக செயல்பட்டு, வெற்றியாளா்களை தோ்வு செய்தனா்.
வெற்றி பெற்ற அணியினருக்கு எம்.கே. ராமநாதன் நினைவு கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன. அந்தவகையில், 150 கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள் ஆகிய பரிசுகளை வீரா்- வீராங்கனைகள் பெற்றனா்.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை, திருவாரூா் மாவட்ட சதுரங்க கழகம், நீடாமங்கலம் வட்ட சதுரங்க கழகம், எஸ்.எஸ். சதுரங்க பயிற்சி மையம், பூவனூா் சதுரங்க கழகம் ஆகியன செய்திருந்தன.