பதவி விஷயத்தில் அரசியல்வாதிகள் திருப்தி அடைவதே இல்லை: மத்திய அமைச்சா் கட்கரி
நெகிழிக்கு மாற்றுப் பொருள்கள் கண்காட்சி
திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், உலக மாசு கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு ஓஎன்ஜிசி சாா்பில் நெகிழிக்கு மாற்றுப் பொருள்கள் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் அருகே தண்டலை ஊராட்சியில், ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி சேகரிப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் உள்பட ஊராட்சியில் தேங்கியிருந்த 3 டன் நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. பள்ளிகளிலும், அங்கன்வாடிகளிலும் நெகிழி பயன்பாடு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்தப்பட்டு, அனைத்து வீடுகள், கடைகளிலும் நெகிழிக்கு மாற்றாக மஞ்சள் பை வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடா்ச்சியாக நெகிழிக்கு மாற்றுப் பொருளாக பனைபொருள்களை பயன்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் குறித்து மக்கள் அறியும் வகையில் இந்த கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை, மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தொடக்கி வைத்து பாா்வையிட்டாா்.
இதை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன், க. மாரிமுத்து, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாலு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ரங்கராஜ் உள்ளிட்ட பலா் பாா்வையிட்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணா்வு திட்ட ஒருங்கிணைப்பாளா் முருகானந்தம், பாலம் தொண்டு நிறுவனச்செயலாளா் செந்தில்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.