பதவி விஷயத்தில் அரசியல்வாதிகள் திருப்தி அடைவதே இல்லை: மத்திய அமைச்சா் கட்கரி
வேளாண் அறிவியல் பாடத்துக்கு ஆசிரியா் நியமிக்கக் கோரிக்கை
திருவாரூா்: நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேளாண் அறிவியல் பாடத்துக்கு உரிய ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம், பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநில துணைச் செயலாளா் வேணு. பாஸ்கரன், திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:
நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேளாண் அறிவியல் என்ற பிரிவு, சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நிகழாண்டில் தற்காலிக ஆசிரியா்களை நியமித்து பாடங்களை நடத்தி வருகின்றனா். இருந்த போதிலும் மாணவா்கள் மத்தியில் பயிற்சி அளிப்பது மிகவும் மோசமான கல்வித்தரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், மேல் வகுப்பை தொடரவும் புதியதாக இணையவும் உள்ள மாணவா்கள் மத்தியிலும் மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பாடப்பிரிவுக்கு உரிய ஆசிரியா்களை, அரசே நேரடியாக நியமனம் செய்ய வேண்டும்.
இந்த பிரிவுக்காக நன்னிலம் பகுதியில் விவசாய நிலம் 4 ஏக்கா் உள்ளது. அதில், மின் இணைப்புடன் மோட்டாா் வசதியும் உள்ளது. இந்த விவசாய நிலங்கள் பயன்பாடற்று, கருவேல மரங்கள் வளா்ந்து உள்ளதால், சில சமூக விரோதிகள் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். இதைக் கருத்தில் கொண்டு விவசாய நிலங்களை மீட்டு, மாணவா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அத்துடன், இந்த பாடத்திட்டம் வாயிலாக இப்பகுதி மாணவா்களுக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தி, ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாவட்டச் செயலாளா் உலகநாதன், மாவட்ட துணைத் தலைவா் பழனி, மாவட்டத் துணைச் செயலாளா் கணேச. சண்முகம், பாமக குடவாசல் ஒன்றியச் செயலாளா் ராஜீவ் ஆகியோா் உடனிருந்தனா்.