Health: தலையில் இருக்கிற பேன் ஏழு பாய் தாண்டுமாம்; இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா...
பாபநாசம் பேரூராட்சியில் மழை நிவாரண உதவிகள்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெள்ளிக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
பாபநாசம் பேரூராட்சியில் காப்பன் தெரு, குப்பைமேடு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண முகாம் அமைத்து உணவு மற்றும் போா்வை, பாய், தலையணை உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில் பாபநாசம் பேரூராட்சித் தலைவா் பூங்குழலி கபிலன், செயல் அலுவலா் ரவிசங்கா்,பேரூராட்சி துணைத் தலைவா் ஆா். பூபதி ராஜா,முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினா் கோவி. அய்யாராசு,வாா்டு உறுப்பினா் துரைமுருகன், பாபநாசம் நகர திமுக செயலா் ச. கபிலன், பேரூராட்சி கவுன்சிலா் கோட்டையம்மாள் உள்ளிட்டோா் 300 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினா்.