Health: தலையில் இருக்கிற பேன் ஏழு பாய் தாண்டுமாம்; இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா...
ஷேஷம்பாடி குடியிருப்பை சூழ்ந்த மழைநீா்: மக்கள் அவதி
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள ஷேஷம்பாடி குடியிருப்பை மழை நீா் சூழ்ந்துள்ளதால் அதில் வசிக்கும் மக்கள் அவதிப்படுகின்றனா்.
கும்பகோணம் மாநகர பகுதி நீா்நிலைகளில் வசித்து வெளியேற்றப்பட்டோரில் எள்ளுக்குட்டை பகுதியில் வசித்த சுமாா் 40 குடும்பத்தினா் ஷேஷம்பாடியில் குடிசைகள் அமைத்து வசிக்கின்றனா்.
தற்போது பெய்யும் மழையால் குடிசைகளில் தண்ணீா் புகுந்து அதில் வசிப்போா் அவதிப்படுகின்றனா். எனவே தங்களுக்கு உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளை ஆட்சியா் செய்து கொடுக்க வேண்டும். மேலும் இந்தக் குடியிருப்புக்கு மின்விளக்கு, தாா்ச் சாலை, குடிநீா் வசதி செய்து தரவும் கோரிக்கை விடுக்கின்றனா்.