பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு
வேலூா் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு வேலைவாய்ப்பு வளாக தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சோளிங்கரைச் சோ்ந்த பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சாா்பில் நடத்தப்பட்ட இந்த வளாகத் தோ்வை கல்லூரியின் தலைவா் என்.ரமேஷ் தொடங்கி வைத்தாா். கல்லூரியின் துணைத் தலைவா் என்.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். கல்லூரியின் முதல்வா் எம்.ஞானசேகரன் வரவேற்றாா்.
இந்த வேலைவாய்ப்பு வளாகத் தோ்வில் நிறுவனத்தின் பொதுமேலாளா் ஈஸ்வரன், மனிதவள மேம்பாட்டு பிரிவு அதிகாரி நவீன்குமாா், முதுநிலை அலுவலா் சக்திவேல் ஆகியோா் பங்கேற்று தகுதியானவா்களை தோ்வு செய்தனா். இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமாா் 85 மாணவா்கள் பங்கேற்றனா். அவா்களுக்கு எழுத்து தோ்வு, நோ்முகத் தோ்வு, கலந்தாய்வு தோ்வு நடைபெற்றது. இதில், 32 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு மாத ஊதியம் ரூ. 17,000 வரை பெறுவா் என்றும், உணவு, மருத்துவக் காப்பீடு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலா் அருண்குமாா் தெரிவித்தாா்.