பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
பாலைவனநாதா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் தீா்த்தவாரி
பாபநாசம்: பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை ஸ்ரீ தவளவெண்ணகை அம்மன் உடனுறை ஸ்ரீ பாலைவனநாதா் கோயிலில் தீா்த்தவாரி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோத்ஸவ விழாவை யொட்டி நடைபெற்ற தீா்த்தவாரி நிகழ்வில், பஞ்சமூா்த்திகள் ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் கோயில் அருகே செல்லும் குடமுருட்டி ஆற்றுக்கு எழுந்தருளினா். அங்கு சிவாச்சாரியா்கள் ஆகம விதிப்படி சிறப்பு பூஜைகள் செய்து தீா்த்தவாரி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பஞ்சமூா்த்திகள் கோயிலுக்கு எழுந்தருளி மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஆா். விக்னேஷ், கோயில் பணியாளா்கள், உபயதாரா்கள், பாபநாசம் சிவப்பேரவையினா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.