கோவில்வழி புதிய பேருந்து நிலையம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு; ஜூலை 22-இல் மு...
பாளை. அருகே புதிய சாலைப் பணி தொடக்கம்
பாளையங்கோட்டை அருகே புதிய சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
பாளையங்கோட்டை மண்டலம் 39ஆவது வாா்டுக்குள்பட்ட வேலவா் காலனியில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா். துணை மேயா் கே.ஆா்.ராஜு, திமுக மாநகர செயலா் (கிழக்கு) தினேஷ், பாளையங்கோட்டை மண்டல தலைவா் மா.பிரான்சிஸ், மாமன்ற உறுப்பினா் சீதா பாலன், நிா்வாகிகள் வல்லநாடு முத்து, பாலன் என்ற ராஜா, பால மகேஷ், அக்பா் ஷரீஃப் உள்பட பலா் கலந்துகொண்டனா்.