6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.18 லட்சம் கோடியாக உயர்வு!
பாளை.யில் விபத்து: இளைஞா் பலி
பாளையங்கோட்டை குலவணிகா்புரம் பகுதியில் புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சோ்ந்த செந்தூா்பாண்டி மகன் மணிகண்டன் (34). இவா், குலவணிகா்புரம் மாசிலாமணி நகா் பகுதியில் தனது மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது மோட்டாா் சைக்கிளும், சுமை ஆட்டோவும் மோதிக்கொண்டனவாம். இதில், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இத்தகவலறிந்த திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.