பிப்ரவரி 20,21,22-இல் உடுமலை நகரில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
உடுமலை நகரில் பிப்ரவரி 20, 21, 22 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து நகராட்சி ஆணையா் சரவணக்குமாா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: உடுமலை நகாராட்சிக்கு உள்பட்ட வாசவி நகா் மேல்நிலைத் தொட்டிக்கு செல்லும் புதிய பகிா்மான குழாய் இணைப்புப் பணிகள், குழாய் உடைப்பு, தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள மின் மோட்டாா் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வாா்டு எண் 1 முதல் 33 வரை உள்ள பகுதிகளுக்கு பிப்ரவரி 20, 21 மற்றும் 22 ஆகிய மூன்று நாள்களுக்கு நகரில் குடிநீா் விநியோகம் முற்றிலும் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், குடிநீரை காய்ச்சி பருகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.