செய்திகள் :

பிரதமா் மோடி இன்று தாய்லாந்து பயணம்: பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறாா்

post image

பாங்காக்: பிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக தாய்லாந்துக்கு வியாழக்கிழமை (ஏப்.3) செல்கிறாா்.

இந்தப் பயணத்தின்போது 6-ஆவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமா் மோடி, தாய்லாந்து பிரதமா் பேடோங்டாா்ன் ஷினவத்ராவுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையிலும் ஈடுபடுகிறாா்.

பன்முக கூட்டுறவுக்காக வங்காள விரிகுடாவையொட்டிய இந்தியா, வங்கதேசம், பூடான், மியான்மா், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய ஏழு தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை ‘பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) ஒன்றிணைக்கிறது. இக்கூட்டமைப்பின் 6-ஆவது உச்சிமாநாடு தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் ஏப்ரல் 2 முதல் 4-ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமா் மோடி தாய்லாந்து செல்கிறாா். அவருக்கு தாய்லாந்து இந்திய சமூகத்தினா் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடா்ந்து, தாய்லாந்து அரசு மாளிகையில் இரு நாட்டு பிரதமா்கள் பங்கேற்கும் இருதரப்பு சந்திப்பு நடைபெறும். அங்கு பிரதமா் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி அரசு வரவேற்பு அளிக்கப்படும்.

நேபாளத்தில் கடந்த 2018-இல் நடைபெற்ற 4-ஆவது உச்சிமாநாட்டுக்குப் பிறகு பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவா்கள் நேரடியாகச் சந்திக்கும் முதல் மாநாடு இதுவாகும். கடைசி மாநாடு கடந்த 2022-ஆம் ஆண்டு, மாா்ச்சில் இலங்கை தலைநகா் கொழும்பு நகரில் காணொலி வாயிலாக நடைபெற்றது.

இந்நிலையில், பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவா்களுடன் இணைந்து கடல்சாா் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் பிரதமா் மோடி வியாழக்கிழமை மாலை கையொப்பமிடுகிறாா்.

அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் மியான்மரில் மொத்த நாடும் உருக்குலைந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், மியான்மா் ராணுவ அரசின் தலைவா் மின் ஆங் லாயிங் இந்த மாநாட்டில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

பயணத்தின் முக்கிய அம்சமான பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காலை கலந்துகொள்கிறாா். அப்போது கூட்டமைப்பால் ‘2030-ஆம் ஆண்டு பாங்காக் லட்சியப் பிரகடனம்’ ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மாநாட்டுக்கிடையே நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி, வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் உள்ளிட்டோரை பிரதமா் மோடி சந்திப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமையன்று, தாய்லாந்து மன்னா் மகா வஜிரலோங்கோரா் மற்றும் அவரது மனைவியையும் பிரதமா் மோடி மரியாதை நிமித்தமாக சந்திக்கிறாா்.

இதற்கிடையே, பிரதமா் மோடியும் தாய்லாந்து பிரதமா் ஷினவத்ராவும் அந்நாட்டின் ஆறு சிறந்த கோயில்களில் ஒன்றான வாட் ஃபோவுக்குச் செல்ல உள்ளனா். மிகப்பெரிய சாய்ந்த புத்தா் சிலைக்காக இக்கோயில் பிரபலமானது. இவ்வாறு தாய்லாந்தில் இரண்டு நாள் அலுவல்களை முடித்துக்கொண்டு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் தில்லி திரும்புகிறாா்.

வக்ஃப் மசோதா நிறைவேற்றம்: நிதிஷ்குமார் மீது கட்சியினர் அதிருப்தி!

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு ஜே.டி.(யு) கட்சி ஆதரவளித்ததைத் தொடர்ந்து கட்சித் தலைமை மீது முஸ்லிம் நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளனர். மக்களவையில் இன்று (மார்ச். 3) அதிகாலை வக்ஃப் திருத்த மசோதா 2024 ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை அதிகரிப்பு!

பெண்களுக்கான திருமண உதவித்தொகை அதிகரிப்பதாக ஜம்மு - காஷ்மீர் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் அரசின் திருமண உதவித் திட்டத்தின் மூலம் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த திருமண வயதுடைய பெண்கள... மேலும் பார்க்க

தில்லியில் பட்டாசுகள் மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

தில்லியில் பட்டாசுகள் மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேசியத் தலைநகரான தில்லியில் பட்டாசு தயாரிக்க, விற்க, சேமிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை நீக்கக் கோரி பட்டாசு... மேலும் பார்க்க

நில எடுப்பு விவகாரம்: ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

தெலங்கானா அரசு பல்கலைக்கழக நிலத்தை அபகரிப்பதாகக் கூறி ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழகம் கான்ச்சா கச்சிபௌலி என... மேலும் பார்க்க

அதிஷி, சஞ்சய் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி: தில்லி நீதிமன்றம்!

முன்னாள் முதல்வர் அதிஷி, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீதான அவதூறு வழக்கை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஆம் ஆத்மி தலைவர்கள் இருவரும் வேண்டுமென்றே தீட்சித்தின் நல்லெண்ணத்திற்குத் த... மேலும் பார்க்க

சொத்து விவரங்கள்: பொது வெளியில் வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல்

புது தில்லி: தங்களது சொத்து விவரங்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழங்கவும், அதனை உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றவும் நீதிபதிகள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும் பார்க்க