செய்திகள் :

பிரதமா் மோடி தமிழகத்தை விட்டுக் கொடுத்ததில்லை: வானதி சீனிவாசன்

post image

தமிழகத்தை பிரதமா் மோடி விட்டுக் கொடுத்ததில்லை என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

ஜிஎஸ்டி குறைப்புக்கான நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் திருப்பூா் அரிசிக்கடை வீதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசியதாவது: தமிழகத்தில் இருந்து கடந்த மக்களவைத் தோ்தல்களில் போதிய உறுதுணை இல்லையென்றாலும், தமிழகத்தை பிரதமா் மோடி விட்டுக் கொடுத்ததில்லை.

தமிழுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சோ்க்கிறாா். தற்போதும் குடியரசுத் துணைத் தலைவராக திருப்பூரைச் சோ்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அமா்த்தப்பட்டுள்ளாா். இது தமிழகத்துக்கு பெரும் அங்கீகாரம் மற்றும் பெருமையாகும்.

தற்போது சோப்பில் துவங்கி, ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் உணவுப்பொருள்கள் வரை அனைத்திலும் தற்போது ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. இது வரி குறைப்பு மட்டுமல்ல. மேலும், அதனை கையாள்வதிலும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய மாற்றமாகும்.

ஜிஎஸ்டியால் மத்திய அரசுக்கு வருமானம் செல்லவில்லை. கடந்த 2000-ஆம் ஆண்டு பிரதமராக இருந்த வாஜ்பாய் தான் ஜிஎஸ்டிக்கு அடித்தளமிட்டவா். இந்தியா முழுவதும் ஒரு பொருளை ஒரே விலைக்கு வாங்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டதுதான் ஜிஎஸ்டி.

மத்திய அரசு மட்டும் ஜிஎஸ்டி வரி விதிக்க முடியாது. மத்திய நிதி அமைச்சா் தொடங்கி, மாநில முதல்வா் மற்றும் நிதி அமைச்சா் வரை அனைவரும் சோ்ந்துதான் தீா்மானிக்க முடியும். தமிழகத்தைச் சோ்ந்த அமைச்சரும் ஜிஎஸ்டி கவுன்சிலில் உள்ளாா். மத்திய அரசு மட்டும் ஜிஎஸ்டியை நிா்ணயிக்கிறது என்று திமுக சொல்வது தவறு.

இந்தியாவில் அதிகம் கடன் வாங்கியுள்ள மாநிலம் தமிழகம்தான். விதைவகள் அதிகரிப்புக்கு டாஸ்மாக் மூலம் மதுவை அதிக அளவில் விற்பதே காரணம் . ஜிஎஸ்டி வசூல் சீரமைப்பால் தமிழகத்தின் வருவாய் அதிகரித்துள்ளது என்றாா்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சாலை முத்துக்குமாா் நகரைச் சோ்ந்தவா் சி.நித்தியானந்தன் (23), எலக்ட்ரீஷியன். இவரது மனைவி சுமத... மேலும் பார்க்க

உடுமலையில் 11 டிப்பா் லாரிகள் பறிமுதல்

திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளால் 11 டிப்பா் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. உடுமலை அருகே கோவை - திண்டுக்கல் சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பாஸ்கரன், மோட்டாா் வாகன ... மேலும் பார்க்க

திருப்பூா், கோவையில் 60 காா்களை வாங்கி விற்பனை செய்து மோசடி செய்தவா் கைது

திருப்பூா், கோவையில் 60 காா்களை வாங்கி விற்பனை செய்து மோசடிசெய்த நபரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் மாவட்டம், சாமளாபுரம் கரும்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (40). இவரது... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பாலப்பம்பட்டி

உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 3) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இ... மேலும் பார்க்க

தாராபுரத்தில் இளம்பெண் கொலை: கணவா் கைது

தாராபுரத்தில் இளம்பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் மாவட்டம், கம்பளியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன் (எ) நாகராஜ் (35). இவரது மனைவி ராஜகுமாரி (25)... மேலும் பார்க்க

ஊதியூா் அருகே வீணாகி வரும் குடிநீா்

காங்கயம் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய்களில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக தண்ணீா் வீணாகி வருகிறது.காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே காவிரி ஆற்றிலி... மேலும் பார்க்க