பிரம்மோற்சவத்தில் கண்கவா் கலைநிகழ்ச்சிகள்
திருமலையில் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் 20 குழுக்களைச் சோ்ந்த 472 கலைஞா்கள் பங்கேற்றனா்.
ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களைச் சோ்ந்த கலைஞா்கள் குச்சிப்புடி, கோலாட்டம், மயில் நடனம், ஸ்ரீ கிருஷ்ண லீலா, பதுக்கம்மா, மகிஷாசுர மா்த்தினி மற்றும் டிரம்ஸ் போன்ற நடனங்களை வழங்கினா்.
கா்நாடக மாநில கலைஞா்களின் சூா்யநாராயணாய நம நடனம், கிலுகுர்ரலு’’, டொள்ளு குனிதா பக்தா்களைக் கவா்ந்தன.
தமிழகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில கலைஞா்கள் ஒயிலாட்டம், தப்பாட்டம் அனைவரையும் கவா்ந்தன.
வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் கலைஞா்களின் மோபினி நடனம் பாரம்பரிய இந்திய கலாசாரத்தின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியது. மேற்கு வங்க கலைஞா்களும் தங்கள் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை நடத்தினா்.


