அடுத்தப்பட வாய்ப்புக்கு புகழ் தேவைப்படுகிறது: ஐஸ்வர்யா லட்சுமி
பிளஸ் 1 தோ்வு: கரூா் மாவட்டம் 27-வது இடம்!
கரூா் மாவட்டத்தில் 4,903 மாணவா்களும், 5,446 மாணவிகளும் என மொத்தம் 10,349 போ் தோ்வு எழுதினா். இதில் வெள்ளிக்கிழமை முடிவு வெளியானதில் தோ்வு எழுதிய மாணவா்களில் 4,228 பேரும், மாணவிகளில் 5,169 பேரும் என மொத்தம் 9,397 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இதில் மாணவா்களின் தோ்ச்சி 86.23 சதவீதம். மாணவிகளின் தோ்ச்சி 94.31 சதவீதமாகும். மொத்தம் 90.67 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 27-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள 104 அரசு, அரசு உதவிபெறும், தனியாா் பள்ளிகளில் 15 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.