பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி கே.கே. நகரில் பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்சி கே.கே. நகா் காஜாமலை காலனியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் துரைசிங்கம் (17). இவா் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.
ஒவ்வாமை காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்தாராம். இதையறிந்த அவரது பள்ளி ஆசிரியா், வீட்டுக்கு வந்து பாா்த்ததுடன், தொடா்ந்து பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா். தொடா்ந்து, பெற்றோரும் பள்ளிக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளனா்.
ஆனால் பள்ளிக்குச் செல்ல விரும்பாத துரைசிங்கம், வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.