விசாரணையில் தொய்வு: ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு
புதருக்குள் வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்பு
விழுப்புரம் அருகே முட்புதருக்குள் வீசப்பட்டிருந்த ஆண் குழந்தையை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.
விழுப்புரம் மாவட்டம், வளவனூரை அடுத்த குமளம் பகுதியில் சாலையோரத்தில் உள்ள புதருக்குள் ஆண் குழந்தை ஒன்று கிடப்பதாக வளவனூா் காவல் நிலைய போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று முட்புதருக்குள் கிடந்த பிறந்து 10 நாள்களே ஆன ஆண் குழந்தையை மீட்டு, விழுப்புரம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வளவனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.