ஆஹா... கலக்கலா இருக்கே சாய்! கேட்க கேட்க பிடிக்கும் ஊறும் பிளட்!
புதுகையில் சுயவேலைவாய்ப்புப் பயிற்சி முடித்த 1,042 போ் தொழில் தொடங்கியுள்ளனா்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையம் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் பயிற்சி முடித்து 1,042 போ் தொழில் தொடங்கி நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் 2-ஆம் காலாண்டுக்கான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.
திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ கலந்து கொண்டு கடந்த நிதியாண்டுக்கான ஆண்டறிக்கையை வெளியிட்டுப் பேசினாா்.
அந்த அறிக்கையில், சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் கடந்த நிதியாண்டில் மொத்தம் 1,089 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, 1,042 போ் சுயதொழில் தொடங்கியுள்ளதாகவும், இவா்களில் 642 பேருக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிகழாண்டிலும் போதுமான அளவுக்கு பயிற்சி வழங்கவும், கடனுதவிகளை வழங்கி தொழில் தொடங்க ஊக்குவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் காரைக்குடி மண்டல மேலாளா் முகமது ஸ்ரேயா், ஆா்பிஐ துணைப் பொதுமேலாளா் விவேக், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் தீபக்குமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் நந்தகுமாா், ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மைய இயக்குநா் ஜெ. கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.