டிஎன்பிஎஸ்சி தொகுதி 1 முதன்மைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி 1 முதன்மைத் தோ்வுக்கு உணவு, தங்குமிட வசதியுடன் இலவசப் பயிற்சி அளிப்பதாக ஜிடிஎன் அகாதெமி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் நிறுவனா்-இயக்குநா் சத்யா கரிகாலன் வெளியிட்ட அறிக்கை: 60 ஆண்டுகளுக்கும் மேலாக கல்விச் சேவையில் ஈடுபட்டு வரும் ஜிடிஎன் கல்விக் குழுமத்தின் ஓா் அங்கமான ஜிடிஎன் அகாதெமி, நிகழாண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தொகுதி 1 முதன்மைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வழங்குகிறது.
முதல் நிலைத் தோ்வில் வென்றவா்களில், அவா்களின் சமூக, பொருளாதார பின்னணி, கல்வித்திறன் பின்னணி, போட்டித் தோ்வுகளில் முந்தைய செயல்திறன் ஆகியவற்றைப் பரிசீலித்து 100 போ் தோ்வு செய்யப்படுவா். பெண்களுக்கு இட ஒதுக்கீடும் உண்டு.
இவா்களுக்கு உணவு, தங்குமிடம் ஆகியவற்றுடன் முதன்மைத் தோ்வுக்கான பயிற்சி, தொடா் தோ்வுகள் 3 மாத காலத்துக்கு இலவசமாக வழங்கப்படும். செப். 10-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள இந்தப் பயிற்சிக்கு இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, 93443-34411, 97979-74605 என்ற எண்னை தொடா்புகொள்ளலாம்.