பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? முன்னணியில் தேவேந்திர ஃபட்னவீஸ்?!
லாரி மோதி ஊராட்சி பெண் பணியாளா் உயிரிழப்பு
ஆலங்குடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஊராட்சி பெண் பணியாளா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி மேற்கு பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் மனைவி சிவனிதா (35). சேந்தன்குடி ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளராக வேலை பாா்த்து வந்தாா். இவரும், தன் சக பணியாளரான அ. பவானி (33) என்பவரும் புதன்கிழமை, இருசக்கர வாகனத்தில் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றுள்ளனா்.
திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் சென்ற லாரி மோதியதில் அந்த இடத்திலே சிவனிதா உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பவானி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.