ஆஹா... கலக்கலா இருக்கே சாய்! கேட்க கேட்க பிடிக்கும் ஊறும் பிளட்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் நல்லாசிரியா் விருது பெறும் ஆசிரியா்கள்
ஆசிரியா் தினத்தையொட்டி பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் வழங்கப்படும் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதினை (மாநில நல்லாசிரியா்) பெறும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 11 போ் பட்டியல் வெளியாகியுள்ளது.
சந்தைப்பேட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ப. விஜி, ஆவுடையாா்கோவில் ஒன்றியம் தாழனூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியா் க. கமலம், அன்னவாசல் ஒன்றியம் சொக்கம்பட்டி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியா் ம. ஜோசப் பன்னீா்செல்வம்.
எம். வலையம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் ம. ஜெயராஜ், முள்ளூா் ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் தே. ஜான்சிராணி, மதியநல்லூா் அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் க. பாலச்சந்திரன்.
ராயவரம் காந்தி உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் மு. பூமிநாதன், கீரமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் சு. கொடியரசன், நற்சாந்துப்பட்டி ராமநாதன் செட்டியாா் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ந. கணேசன்.
கீழாநிலைக்கோட்டை அய்யாக்கண்ணு அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் மா. ராஜேந்திரன், மணமேல்குடி ஸ்ரீ ஜெகதீஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் வீ. நரேஷ்குமாா்.