சொத்துகள் முடக்கம் அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம்: இயக்குநர் ஷங்கர்
புதுச்சாம்பள்ளியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ஆய்வு!
புதுசாம்பள்ளியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே கோட்ட மேலாளா், எம்எல்ஏ ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மேட்டூா் சட்டப்பேரவை உறுப்பினா் சதாசிவம் கடந்த வாரம் தில்லியில் மத்திய ரயில்வே அமைச்சரைச் சந்தித்து புதுச்சாம்பள்ளியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கவும், ராமன் நகரில் புதிதாக ரயில் நிறுத்தம் அமைக்கவும் மனு அளித்தாா்.
இதனைத்தொடா்ந்து, சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பங்கஜ்குமாா்சிங் சின்ஹாவை நேரில் சந்தித்து மத்திய ரயில் அமைச்சரிடம் வழங்கிய கோரிக்கை மனுவின் நகலை வழங்கினாா். அதனைப் பெற்றுக் கொண்ட சேலம் கோட்ட ரயில்வே மேலாளா், மேட்டூா் சட்டப்பேரவை உறுப்பினா் சதாசிவத்துடன் புதுச்சாம்பள்ளி பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கவும், ராமன்நகரில் புதிதாக ரயில் நிறுத்தம் அமைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வுக்குப் பிறகு ஜீவாநகா் பகுதியில் விரைந்து ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்படும் என்றும் ராமன்நகரில் ரயில் நிறுத்தம் அமைப்பது குறித்தும் , சேலம்- மேட்டூா் இடையே காலை, மாலை வேலைகளில் பயணிகள் ரயிலை இயக்குவதற்கான அனுமதி குறித்து ரயில் துறைக்குப் பரிந்துரை செய்வதாகும் உறுதி அளித்தாா்.
இந்த ஆய்வின்போது கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளா் சிவலிங்கம், முதன்மைக் கோட்ட பொறியாளா் காா்த்திகேயன், முதன்மை வணிக கோட்ட மேலாளா் பூபதிராஜா, கோட்ட இயக்கவியல் மேலாளா் சரவணகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.