செய்திகள் :

புதுச்சேரி: பட்டமளிப்பு விழாவில் வேட்டி, சேலை அணியாவிட்டால் அனுமதியில்லை!- ஜிப்மர் உத்தரவால் சர்ச்சை

post image

பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் அவர்களின் விருப்ப ஆடையை அணிந்து, அதன்மீது கறுப்பு நிற அங்கியை அணிந்து வருவார்கள். இந்த நிலையில் கடந்த 2024 ஆகஸ்ட் 23 அன்று, `பட்டமளிப்பு விழாவில் அணியப்படும் கறுப்பு நிற ஆடை ஆங்கிலேய ஆட்சியர்களால் தங்கள் காலனி ஆதிக்க நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் அமைந்திருக்கும் மாநிலங்களின் பாரம்பர்யத்திற்கு ஏற்ப பட்டமளிப்பு விழா ஆடைகளை நிர்ணயித்துக் கொள்ளலாம்’ என மத்திய அரசு மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.

ஜிப்மர் - வேட்டி சேலை தடை
ஜிப்மர் - வேட்டி சேலை தடை

`இந்த உத்தரவுக்கு நீதிபதிகளுக்கு பொருந்துமா?’ என அப்போதே எதிர்க் கருத்துகள் எழுந்தன. இந்த நிலையில்தான் பட்டமளிப்பு விழாவுக்கான ஆடைக் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ஜிப்மர் நிர்வாகம். அதில், `சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் ஜிப்மர் பட்டமளிப்பு விழாவுக்கு பாரம்பர்ய உடைகளை அங்கீகரித்திருக்கிறது. அதனால் வரவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் நேரடியாக பட்டங்கள் பெறும் மாணவர்கள் கட்டாயம் ஆடைக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். அன்றைய தினம் ஜிப்மர் நிர்வாகம் கூறும் பாரம்பர்ய உடைகளைத் தவிர வேறு உடை அணிந்து வருபவர்களுக்கு கட்டாயம் அனுமதி இல்லை.

ஆண்களுக்கான இந்திய பாரம்பர்ய உடை என முழுக்கையுடன் கூடிய பைஜாமா அல்லது, வெள்ளை நிற வேட்டி அணிந்து வர வேண்டும். அதேபோல அவர்கள் கறுப்பு, பிரவுன் நிறத்திலான ஷூவை மட்டுமே அணிய வேண்டும். சேண்டல்கள், செருப்பு அணிந்து வர அனுமதியில்லை. பெண்களுக்கான இந்திய பாரம்பர்ய உடை என தங்க நிற பார்டருடன் கூடிய வெள்ளை நிற சேலையும், அதற்கு தங்க நிற ஜாக்கெட் அணிய வேண்டும். அல்லது தங்க நிற பார்டருடன் கூடிய வெள்ளை நிற முழுக்கை சுடிதார் அல்லது சல்வார் கமீஸ் அணியலாம். காலணிகளை பொறுத்தவரை நடக்கும்போது சத்தம் வராத காலணிகளை அணிந்து வரலாம்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜிப்மர் - வேட்டி சேலை தடை அறிவிப்பு
ஜிப்மர் - வேட்டி சேலை தடை அறிவிப்பு

இந்த உத்தரவு மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. `மத்திய அரசு கல்வி நிறுவனமான ஜிப்மரில் இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு பார்ம்பர்ய உடைகள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது உத்தரவில் கேரள மாநிலத்தின் பாரம்பர்ய உடைகள் குறிப்பிட்டிருப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?’ என்று மாணவர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

Bihar SIR: "நெருப்புடன் விளையாடாதீர்கள்; 'Bihar SIR'-யை கைவிடுங்கள்"- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலையொட்டி பீகார் மாநிலத்தில் 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி (Bihar SIR)' மேற்கொள்ளப்படுகின்றது.இந்த ... மேலும் பார்க்க

OTT App Ban: 25 ஓடிடி செயலிகளுக்குத் தடை; எம்.பி-யின் குற்றச்சாட்டும், அரசின் அதிரடி நடவடிக்கையும்!

ஆபாசம் நிறைந்த வசனங்கள், காட்சிகள், காணொலிகள் இருப்பதாகக் கூறி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 25 ஓடிடி செயலிகளுக்குத் தடைவிதித்திருக்கிறது. சில ஓடிடி செயலிகள் ஆபாசமான காணொலிகள், வெப்சீரிஸ், ... மேலும் பார்க்க

Kamal Haasan: ``காந்தி, அம்பேத்கர், பெரியாரின் எண்ணங்கள் என் நரம்புகளில் ஓடுகிறது. ஆனால்..!" - கமல்

இன்று மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சா... மேலும் பார்க்க

Kamal Haasan: ``கமல்ஹாசன் எனும் நான்... கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன்" - மாநிலங்களவையில் கமல்

இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்ப... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு எவ்வளவு செலவானது? - வெளியுறவு அமைச்சகம் பதில்!

பிரதமர் மோடி மீது இருக்கும் குற்றச்சாட்டுகளில் முக்கியமான ஒன்று அவர் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள். தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு பல்வேறு காரணங்களுக்காக தொடர் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இப்போ... மேலும் பார்க்க

``இந்தியா, சீனாவுக்கு வேண்டாம்; அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை கொடுங்கள்..'' - ட்ரம்ப் கறார்

அமெரிக்கா அதிபரும் Make America Great Again (MAGA) அமைப்பின் தலைவருமான டொனால்ட் ட்ரம்ப் நியூயார்க்கில் நடந்த செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப... மேலும் பார்க்க