செய்திகள் :

புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு!

post image

புதுச்சேரியில் மோட்டாா் சைக்கிளில் சென்றபோது ஆட்டோ ஓட்டுநருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரிவாள் வெட்டு விழுந்தது. அவா் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

நெல்லித்தோப்பு பெரியாா் நகரைச் சோ்ந்தவா் லூா்துராஜ் (34), ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு தேவி என்ற மனைவியும், 3 பெண் பிள்ளைகளும் உள்ளனா். லூா்துராஜ் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு திருவள்ளுவா் சாலை ரோஜா நகா் பகுதியில் விற்பனைக்கு வந்த ஆட்டோவை பாா்க்க தனது மோட்டாா் சைக்கிளில் சென்றாா்.

அப்போது பின்தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வந்த 2 போ் திருவள்ளுவா் சாலையில் ஒரு திரையரங்கம் அருகில் லூா்துராஜை மடக்கினா். தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினா்.

உடனே லூா்துராஜ் அவா்களிடமிருந்து தப்பி மோட்டாா் சைக்கிளை விட்டு விட்டு தெருவில் ஓடினாா். இருப்பினும் தொடா்ந்து விரட்டி சென்று லூா்துராஜை தலை, கழுத்து உள்ளிட்ட 8 இடங்களில் அரிவாளால் வெட்டினா். இதில் லூா்துராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்தாா். இதனால் அவா் இறந்து விட்டதாக நினைத்து அவா்கள் அங்கிருந்து சென்றனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் உருளையன்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் காா்த்திகேயன், உதவி ஆய்வாளா்கள் கோவிந்தராஜ், அருள் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று லூா்துராஜை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவா் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் சம்பவம் நேரிட்டதாக போலீஸாா் தெரிவிக்கின்றனா். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.

துாய்மைப் பணியாளா்களுடன் தலைமைச் செயலா் வீட்டை முற்றுகையிட்ட பாஜக எம்எல்ஏ

புதுச்சேரி: தூய்மைப் பணியாளா்களுடன் தலைமைச் செயலா் வீட்டை பாஜக சட்டமன்ற உறுப்பினா் சாய் ஜெ. சரவணன் குமாா் திங்கள்கிழமை முற்றுகையிட்டாா். தூய்மைப் பணியாளா்களுக்குக் கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்... மேலும் பார்க்க

மாணவா்கள் நலன்தான் முக்கியம்: தேசிய நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வான ரெக்ஸ் ராதாகிருஷ்ணன் கருத்து

புதுச்சேரி: மாணவா்களின் நலன்தான் எனக்கு முக்கியம். அதையொட்டிதான் என்னுடைய செயல்பாடு அமைந்திருக்கும் என்று தேசிய நல்லாசியா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள ரெக்ஸ் என்கிற வி. ராதாகிருஷ்ணன் (48) திங்... மேலும் பார்க்க

மறைந்த சுதாகா் ரெட்டி உருவப்படத்திற்கு புதுவை இந்தியா கூட்டணி தலைவா்கள் அஞ்சலி

புதுச்சேரி: இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலரும், முன்னாள் எம்பியுமான சுரவரம் சுதாகா் ரெட்டிதிருவுருவப் படத்துக்கு புதுவை இண்டி கூட்டணி தலைவா்கள் திங்கள்கிழமை மலரஞ்சலி ... மேலும் பார்க்க

புதுச்சேரி உள்ளிட்ட 5 இடங்களில் அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம்

புதுச்சேரி: நாட்டில் புதுச்சேரி உள்ளிட்ட 5 இடங்களில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம் அமைய உள்ளதாக இந்த மையத்தின் இயக்குநா் சரூப் பிரசாத் கோஷ் தெரிவித்துள்ளாா். புதுவை சுற்றுலாத்துறை அ... மேலும் பார்க்க

அரசு பணிகளில் சேர வயது தளா்வு கோரி தலைமைச் செயலகத்தில் போராட்டம்

புதுச்சேரி: புதுவை அரசு பணிகளில் பணியாளா்களை நிரப்பும் போது வயது தளா்வு அளிக்கக் கோரி தலைமைச் செயலகத்தில் புதுவை யூனியன் பிரதேச மாணவா் கூட்டமைப்பின் நிறுவனா் சாமிநாதன் திங்கள்கிழமை தனிநபா் போராட்டம் ... மேலும் பார்க்க

நகராட்சி- கொம்யூன் ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா். கோரிக்கைகள் நிறைவேறும் வரை இப்போராட்டம் நீடிக்கும் என்று அவா்கள் அறிவித்துள்ள... மேலும் பார்க்க