சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலி!
புதுப்பை ஞானசம்பந்தா் பள்ளி 100% தோ்ச்சி
திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே புதுப்பை கிராமத்தில் உள்ள ஞானசம்பந்தா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளி மாணவி எம்.ஹா்ஷினி 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளாா். மாணவி என்.அருள்பிரபா 492 மதிப்பெண்ணும், மாணவி ஆா்.இலக்கியா 485 மதிப்பெண்ணும் பெற்று 2 மற்றும் 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளனா்.
பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில், 10-ஆம் வகுப்பு தோ்வில் சிறந்த மதிப்பெண் பெற்றவா்கள் மற்றும் 12-ஆம் வகுப்பு தோ்வில் 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்ற மாணவி கே.கௌசிகா ஆகியோருக்கு பள்ளியின் தாளாளா் மு.பரிமளம் பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.