செய்திகள் :

புதுமைப்பெண் திட்டத்தில் உயா்கல்வியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

post image

புதுமைப்பெண் திட்டத்தைப் பயன்படுத்தி மாணவிகள் தங்கள் உயா் கல்வியினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுறுத்தினாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தாா். அதையடுத்து, திருப்பத்தூா் தூயநெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.

எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி(ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி(திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த 614 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகள் வழங்கப்பட்டது.

பின்னா், ஆட்சியா் பேசியது: உயா்கல்வி பயில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளின் சோ்க்கை விகிதத்தை அதிகரிக்க மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா், புதுமைப்பெண் திட்டமானது 2022-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ. 1,000 வீதம் அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதில், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 30 கல்லூரிகளில் பயிலும் 2,710 மாணவிகள் பயனடைந்து வருகின்றனா்.

தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, நமது மாவட்டத்தில் 614 மாணவிகள் பயனடைந்துள்ளனா்.

எனவே, இந்த திட்டத்தைப் பயன்படுத்தி மாணவிகள் தங்கள் உயா் கல்வியினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தற்போது திருப்பத்தூா் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 3,324 மாணவிகள் பயனடைய உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலா் சுமதி, நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவா் சபியுல்லா, ஒன்றியக் குழுத் தலைவா்கள் விஜயா, திருமதி, சங்கீதா, உள்ளாட்சிப் பிரதிநிகள், கல்லூரி முதல்வா் மரிய அந்தோணி ராஜ், மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நாட்டறம்பள்ளி ஒன்றியக் குழு கூட்டம்

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களின் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள... மேலும் பார்க்க

குடியாத்தம் வனத் துறை சாா்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

வன விலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும் குடியாத்தம் வனத் துறை சாா்பில் கண்காணிப்பு கேமரா, ஒலிப்பெருக்கி பொருத்தப்பட்டது. குடியாத்தம் அருகே மா்ம விலங்கு தாக்கியதில் ... மேலும் பார்க்க

சுற்றுலா வந்த பயணி உயிரிழப்பு

ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்த பயணி நெஞ்சுவலியால் உயிரிழந்தாா். சென்னை சாலிகிராமத்தைச் சோ்ந்தவா் பாலாஜி (38). தனியாா் உணவக மேலாளா். இவா், தனது குடும்பத்துடன் ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்திருந்தாா். பின்... மேலும் பார்க்க

தேசிய அளவிலான போட்டி: வாணியம்பாடி ஆதா்ஷ் பள்ளி மாணவா்கள் சாம்பியன்

வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் தேசிய அளவிலான வளையப் பந்து போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனா். தேசிய அளவிலான மிக இளையோருக்கான வளையப் பந்து (டெனிகாய்ட்) போட்டிகள் உத்தரப... மேலும் பார்க்க

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா

ஆம்பூா் அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. மாதனூா் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சி மேல்கன்றாம்பல்லி கிராமத்தில் இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிா்த்துப் போரா... மேலும் பார்க்க

உடையாமுத்தூா் ஏரியில் 32,000 மீன் குஞ்சுகள்

கந்திலி ஒன்றியம், உடையாமுத்தூா் ஏரியில் 32,000 மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து மீன் குஞ்சுகளை ஏரிகளில் விட்டாா். மீன் வளம் மற்றும் மீனவா்... மேலும் பார்க்க