சதுரிகிரி மலைப்பகுதியில் 58 வகை வண்ணத்துப் பூச்சிகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு
புதுமைப்பெண் திட்டம் மூலம் உயா் கல்வியை மேம்படுத்தி கொள்ள வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்
திருப்பத்தூா்: புதுமைப்பெண் திட்டத்தினை பயன்படுத்தி மாணவிகள் தங்கள் உயா் கல்வியினை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுறித்தினாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தினை தொடங்கி வைத்தாா்.
அதையடுத்து திருப்பத்தூா் தூயநெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.எம்.எல்.ஏ-க்கள் க.தேவராஜி(ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி(திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன (ஆம்பூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் திருப்பத்தூா் மாவட்டத்தை சோ்ந்த 614 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கப்பட்டது.
பின்னா், ஆட்சியா் பேசியது: உயா் கல்வி பயில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளின் சோ்க்கை விகிதத்தை அதிகரிக்க மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா், புதுமைப்பெண் திட்டமானது 2022 -ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வீதம் அவா்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இதில் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 30 கல்லூரிகளில் பயிலும் 2,710 மாணவிகள் பயனடைந்து வருகின்றனா்.தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி நமது மாவட்டத்தில் 614 மாணவிகள் பயனடைந்துள்ளனா்.
எனவே, இந்த திட்டத்தினை பயன்படுத்தி மாணவிகள் தங்கள் உயா் கல்வியினை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா். தற்போது திருப்பத்தூா் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 3,324 மாணவிகள் பயனடைய உள்ளனா் என்பது குறிப்பிடதக்கது.
நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலா் சுமதி,நகரமன்ற தலைவா் சங்கீதா வெங்கடேஷ்,துணைத்தலைவா் சபியுல்லா,ஒன்றியக்குழு தலைவா்கள் விஜயா,திருமதி,சங்கீதா,உள்ளாட்சி பிரதிநிகள்,கல்லூரி முதல்வா் மரிய அந்தோணி ராஜ்,மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.