புத்தன் தருவை, கரிசலில் இந்து முன்னணி கொடியேற்று விழா
தை திருநாளை முன்னிட்டு, புத்தன் தருவை பெருமாள் நகா், கரிசலில் இந்து முன்னணி கொடியேற்று விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளுக்கு இந்து முன்னணி மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் சக்திவேலன் தலைமை வைத்து அமைப்பின் கொடியை ஏற்றினாா். இதில், சாத்தான்குளம் ஒன்றிய துணைத் தலைவா்கள் இசக்கிமுத்து, செல்வமுத்துக்குமாா், ஒன்றிய பொதுச்செயலா் மாயவன முத்துசாமி, ஒன்றியச் செயற்குழு உறுப்பினா்கள் முத்துக்குமாா், வெற்றிவேல், வாலத்தூா் கிளைத் தலைவா் சிவக்குமாா், இந்து முன்னணி பிரமுகா் லிங்கராஜ், புத்தன்தருவை ஆா்.எஸ்.எஸ். பிரமுகா் லிங்கபாண்டி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா் .