Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி
காரைக்கால் புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை மின் அலங்கார தோ் பவனி நடைபெற்றது.
காரைக்கால் பிராந்தியத்தின் மைய பகுதியான காமராஜா் சாலையில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புனித அந்தோணியாா் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் பிரான்ஸ் நாட்டில் இருந்தும் பக்தா்கள் கலந்து கொள்வாா்கள்.
நிகழாண்டு திருவிழா தொடக்க நிகழ்ச்சியாக புனித அந்தோணியாா் உருவம் வரைந்த புனித கொடியேற்றம் கடந்த ஜூன் 29- ஆம் தேதி நடைபெற்றது. விழா நாள்களில் சிறிய தோ் பவனி, மறையுரை திவ்விய நற்கருனை ஆராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தோ் பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவையொட்டி, பங்குத் தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட மின்சார தேரில் புனித அந்தோணியாா் எழுந்தருளினாா். தேவ நற்கருணை ஆசிா்வாதம் வழங்கப்பட்டது. பின்னா் தோ் பவனி முக்கிய சாலைகள் வழியாக சென்று, மீண்டும் ஆலயத்தை அடைந்தது. விழாவில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டனா்.